கவிதை கண்களால் கண்டு
பாராளும் வேந்தன் நான்
என்னை நேசிப்பவரை வாழ்த்தவும்
சோதிப்பவரை வீழ்த்தவும்
ஆயுதங்கள் தேவைப்படுவதில்லை
எமக்கு, எதற்கும் பயமறியா
எம் எழுத்துக்களே போதுமானது
எம் துக்கமோ, இன்பமோ, துன்பமோ
கோபமோ, வருத்தமோ முகம் மறைக்கும்,
அதன் காரணியை என் எழுத்தோ
துணிச்சலாய் எடுத்துரைக்கும்
அதுவே தேவைப்படும் போது
அவற்றின் வீரியம் தெரியா வீணனுக்கு
புரியவைக்கும் எழுத்துக்களின்
வலிமையை !!!

No comments:
Post a Comment