Friday, May 24, 2013

வானவில்

ஏழு நிறங்கள் இருந்தும்
வானவில் எனக்கு
அழகாய் தெரியவில்லை
காரணம்
அதனிடம் தான் உன் நிறம்
இருக்கவில்லையே 

எனக்கு தெரிந்து
ஒரே அழகிய நிறமுள்ள 
ஒரே  நிறமுள்ள அழகிய
வானவில் நீ மட்டும் தான்

இன்னொரு சிறப்பு
நீ மழை வந்தவுடன
உதிப்பதுமில்லை 
மழை நின்றவுடன்
மறைவதில்லை

தொலைந்துவிட்டவள்














நான் தேடாத பொருளாம்
காதலை கிடைக்கச் செய்தவள்,
தொலைந்துவிட்டாள்
காதலோடு அவளை நான் 
தேடும் போது

கிடைத்து விடுவாள் அவள்
நிலைத்துவிடும் காதல்
என்ற நம்பிக்கையுடன்
தேடலை தொடர்கிறேன்

சிறகில்லா தேவதைள்













காதல் வந்த பின்பு
பெண்கள்  சிறகுகள்
முளைத்த தேவதைகளாய்
மாறிப்போகின்றனர்
அதனால் தானோ என்னமோ
சீக்கிரத்திலேயே காதலை விட்டும்,
காதலனை விட்டும்
பறந்து விடுகின்றனர்
தங்கள் மனம் போன போக்கில்

மிகைப்படுத்தி ...












நான் உன்னை பற்றி
எது சொன்னாலும் மிகைப்படுத்தி
சொல்வதாய் சொல்கிறார்களே
அப்படி என்ன சொல்லிவிட்டேன்
சூரியன் உன்னை பார்த்து விட்டு தான்
மறைகிறது, நிலவு உன்னை பார்க்கவே
தினமும் வருகிறது என்பதை தவிர
இதில் என்ன
மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது ???
எதை சொல்கிறார்கள் ???
என்று தெரியவில்லை 

நனையாமல்


















தோழியே !!
குடை எதுவும் 
நமக்கு தேவையில்லை
நான் உன் அருகில்
இருக்கும் போது
மழை என்றும் உன்னை
நனைப்பதில்லை

காரணம் மழைக்கு
தெரிந்திருக்கும் நான் உன்
மேல் வைத்திருக்கும்
காதலும் அதன் சக்தியும்

ஒருவேளை உன்னை அது
நனைத்து இம்சித்தால் அதற்க்கு
ஏற்படும் இன்னலும் அது
தெரிந்து வைத்திருக்கும்

எனவே வா என்னுடன் 
நம்பிக்கையுடன் மழையில்
நடந்து செல்வோம் நனையாமல் 
வாழ்கை கடந்து செல்வோம்
கலங்காமல்...

நோய்














காய்ச்சலும் தலைவலியும்
மட்டுமல்ல காதலும்
அவனவனுக்கு வரும்
போது தான் அதன்
அவஸ்தையே புரிகிறது

ஆனாலும் இந்நாள்
வரையிலும் கூட
எந்த நோயிமே காதலை
போல் மனதை உருக்கி
உயிரை பறிப்பதில்லை..

Friday, May 10, 2013

தேவதை













அந்நாளில் என் பாட்டி
சொன்ன கதைகளில்
நிலவை மட்டுமே நம்பினேன்
அன்று இரவு வான்நிலவை
கண்டபிறகு,
இன்று அவள்  சொன்ன
தேவதைகள் பற்றிய
கதைகளையும் கூட
நம்புகிறேன்
உன்னை கண்ட பின்பு  

அழகு நிலா













என் வாழ்க்கை பயணம்
தொடங்கியது முதலாய், நான் எங்கு
சென்றாலும், பயணம் எவ்வளவு
கடினமாய் இருந்தாலும்
என் பாதைக்கு ஒளி தந்து
என்னுடனயே பயணிக்கிறது
இந்த வான் நிலா
இதற்கும் தான் என்மேல்
எவ்வளவு அக்கறை

இப்படிதானே எண்ணியிருந்தேன்
இப்போது தான் உண்மை புரிகிறது

என்னவளே, எனக்காய் காத்திருக்கும்  
உன்னிடம் சேர்க்கத்தானோ
இவ்வளவு பாதுகாப்பாய்
ஆதி முதல் இன்று வரை என்னை
அழைத்து வந்திருக்கிறது
இந்த அழகு  நிலா