அழுகிறாயா?? நீயா ??
ஆச்சரியத்துடன்
பார்த்துவிட்டு கீழே விழுந்தது
என் முதல் கண்ணீர் துளி
அதற்கு தெரியாத காரணமும்
எனக்கு தெரிந்த ஒரே காரணமும்
அவள் தான்
அவள் மட்டும் தான்
என்னவளே!! இராப்பகலாய்
என் கண்களில் கனவாய்
நிறைந்திருப்பதை
நிறுத்திக்கொண்டு, இனி
அதிகாலை கனவில் மட்டும்
மறக்காமல் வந்து விடு
காரணம்
அதிகாலை கனவு தான்
பலிக்குமாம்
நீ மட்டும் வர
சம்மதித்தால் போதும்
சூரியனையும் கேட்டுவிடலாம்
அதிகாலையை
நம் வாழ்நாள் முழுவதும்
எல்லா பொழுதுகளிலும் நீட்டிக்க
எங்கள் மனங்களை
நனைக்காமல்
இணைத்துவிட்டு செல்கிறது
குடை மறந்த சாரல் மழை
இவ்வுலகில்
காதலைக்காட்டிலும் இவ்வளவு
விரைவாய், எளிதாய்
பரவும் கொடிய நோய் ஏதுமில்லை
இது மனதில் தோன்றி
நம் வாழ்வில் நம்முடனே பயணித்து
நம் உயிரையும், உணர்வையும்
அழித்து விட்டு தான்
ஓய்கிறது
நள்ளிரவில் நாமிருவர்
மட்டும் வானத்தை
ரசிக்கும் போது
உன் புன்னகையில்
வான் நட்சத்திரங்களையும்
எண்ணிவிடுவேன் சுலபத்தில்
வின்மீனைக் காட்டிலும்
உன் புன்னகை தான்
பிராகாசிக்கும் அல்லவா ??
நீ ஹோலிப்பண்டிகை
கொண்டாடும் போது
வானவில்லும் வரிசையில்
நிற்கும் தன்னிடம்
இல்லாத வண்ணத்தை
உன்னிடம் கடன்பெற
ஆனாலும் சந்தேகம்
தான் அந்த வண்ணங்களை
பெற்றும் உன்னை விட
அது அழகாய் தெரிவது
ஏன்னெனில் இயற்கையிலயே
நீ அழகு செயற்கை
வண்ணம் பூசியும்
அழகு ; அதனிடம் குறைவு
சிற்பி அழுதான்
"கடவுளே சிலை ஒழுங்காய்
வரவேண்டும்" என்று
கல் அழுதது "கடவுளே
எனை நொறுக்கி
செதுக்குகிறான் சிற்பி" என்று
கல் சிலை ஆன பின்
அதனிடம் மனிதன் அழுதான்
"கடவுளே துன்பம் என்னை
நொறுக்குகிறது" என்று
உண்மையில் எங்கே கடவுள் ???
எது தான் துன்பம் ???
துன்பமே தொடக்கமானால்
கடவுள் தான் முடிவோ ??
கடவுளை நம்புகிறவனோ
நம்பதவனோ
யார் இறந்தாலும்
சுவரொட்டிகள் சொல்லுகிறது
"இறைவனடி சேர்ந்தார்"
சில மனிதர்க்கு தெரியாதது
சுவரொட்டிக்கும் கூட தெரிகிறது
எல்லோருடைய
இறுதி யாத்திரையின்
நிறைவும் இறைவன்
தான் என்று
அவள் ஒன்றும்
புள்ளிகளை இணைத்து
மணலில் கோலமிடுவதில்லை
புன்னகையை சேர்த்து
கோலமிடுகிறாள்
என் மனதில்
என் நண்பர்கள்
காதலில் தோற்றவர்களா
காதலில் தோற்றவர்கள்
என் நண்பர்கள்
ஆகின்றனரா தெரியவில்லை
ஆனால் எப்படியோ
சேர்ந்துவிட்டோம்
ஓர் அணியாய்
இது தான்
"ஓர் இனப் பறவைகள்
ஒன்றாய் சேரும் என்பதோ "?
ஆனால் எங்களில் எவரும்
காதலை மறப்பதுமில்லை
அவரவர் காதலியை
வெறுப்பதும் இல்லை
காரணம்
நட்பு மறப்பதையும்
வெறுப்பதையும்
எங்களுக்கு
கற்றுக்குடுக்கவில்லை
என்னை தனிமை விரும்பி
என்கிறார்கள் நண்பர்கள்
அவர்களுக்கு தெரியாது
நான்
தனித்திருந்து தனிமையை
பழக்கிக்கொண்டவன் என்று
இரண்டுக்கும்
வித்தியாசம் இருக்கிறது
நீ விலகிச்சென்ற பின்
வெறிச்சோடிய சாலையிலும்
எனக்கு மட்டும்
தெளிவாய் தெரிகிறது
உன் பாத சுவடுகள்