Friday, November 11, 2011

தங்கையின் பிறந்தநாள்












இன்று 
தங்கையின் பிறந்தநாள்
இது மழைகாலம்
என்பதை அறிந்திருந்தும்
அப்பாவியாய் கேட்டாள்...
என் பிறந்தநாளில்
மட்டும் ஏன் இப்படி மழை
கொட்டித்தீர்க்கிறதென்று

அவள்
அழுவதை
காணமுடியதவனாய் சொன்னேன் ...
பரந்து விரிந்த இந்த வானத்தில் பல
நட்சத்திரங்கள் கொட்டிக்கிடந்தும்
என் தங்கையை போன்றதோர்
அழகிய நட்சத்திரத்தை
பூமிக்கு கொடுத்தபடியினால்
இந்த வானம்
பொறாமையினால்
இப்படி அழுகின்றதென்று..
இதைக்கேட்டவுடன் மழையுடன்
மின்னலும் பளிச்சிட்டது
அவள் புன்னகையில்
 

No comments:

Post a Comment