Wednesday, November 23, 2011

கவிதை கிறுக்கல்கள்

ஓர் கவிஞன் 
பல நாட்களாய்
யோசித்து எழுதிய தன்
கவிதைக்கு
தலைப்பு கிடைக்காமல்
தடுமாறி
கைக்கு கிடைத்த
தலைப்பை வைப்பது போல்தான்
நம் கடவுளும் கூட
முதல் சிறந்த கவிஞன் ;

அவர்

பலமுறை யோசித்துவிட்டு
படைத்த
சில மனிதர்களுக்கு மட்டும்
கைக்கு கிடைத்த
தலையெழுத்தை
கிறுக்கிவிடுகிறார்...

சில கிறுக்கல்கள் மட்டும்

கவிதைகளாய் மாறுகின்றன..
மற்றவைகள்
வெறும் கிறுக்கல்களாய்
குப்பை தொட்டியை சேர்கின்றன ..

என் தலையெழுத்து 

கவிதையா ??
கிறுக்கலா ??  

No comments:

Post a Comment