ரோம பேரரசு
பற்றி எறியும் போது
பிடில் வாசித்தானாம் மன்னனொருவன்
நானும் தான் ...
என் வாழ்கையே
வீணாகிக்கொண்டிருக்கும் போதும் கூட
நாளைய கவலைகளை மறக்கடிக்கும்
முகப்புதகத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறேன் ...
நஷ்டம் மட்டுமே மிஞ்சும் என்றறிந்தும்
இதில் என் துக்கத்தையும்
சந்தோசத்தையும் முதலீடாக்கிருக்கிறேன் ...
இதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறேன்
என்னையும்
என் மகிழ்ச்சியும்
இந்த மாய உலகிலிருந்து மீட்டெடுக்க
எனக்கென்று ஒரு அவள்
என்னவளாய் என்று வருவாளோ ???
காத்திருக்கிறேன் ஆர்வமுடன் !!! ஆவலுடன்!!!
No comments:
Post a Comment