நான் எதையோ தொலைத்தவனாய்
சோகமாய் உட்கார்ந்திருக்க
அப்பா சொன்னார் "பொறுப்பற்றவன்
எதையோ தொலைத்து விட்டான்" என்று
அம்மா சொன்னாள் "சொன்னால்
நாங்களாவது தேடித்தருவோம்" என்று
தங்கை சொன்னாள்
"நான் எடுக்கவே இல்லை" என்று
தம்பியோ "நல்லா வேண்டும்" என்றான்
அவர்களிடம் நான் எப்படி சொல்வேன்
நான் தொலைத்தது என்
விலைமதிப்பில்லா இதயத்தை என்று

No comments:
Post a Comment