இன்று
என்னவளின் பிறந்த நாள்
முன்பே என்னவளுக்காய்
அவள் பிறந்த நாளின் போதும்
பிற விழாக்களின் போதும்
நான் வாங்கிச் சேர்த்த
பரிசுப் பொருட்களுடன் ,
வாழ்த்து அட்டைகளுடன்,
இந்தமுறை
கடை கடையாய் ஏறி இறங்கி
பல மணிநேரம் தேடித்தேடி
நான் எடுத்த வாழ்த்து அட்டையும்
அவளை சேராமலே,
என் பெட்டிக்குள்ளே
தூங்கவிருக்கிறது...
நான் எப்படி காதலை தெரிவிக்காமல்
நொந்து போகிறேனோ ,
அப்படியே அவளைச் சேராமலே
என் வாழ்த்துக்களை கூறாமலே
பெட்டிக்குள் முடங்கிப்போகிறது
நான் எப்படி அவள் காதலை பெற
காத்திருக்கிறேனோ
அதே போல்
அவளை வாழ்த்த காத்துக்கிடக்கின்றது
என்னைப்போலவே அதிர்ஷ்டம் இல்லா
வாழ்த்து அட்டைகள்
No comments:
Post a Comment