Friday, February 17, 2012
பறவையின் பாட்டு
வானில் சுதந்திரமாய்
சுற்றித்திரியும் சிறுபறவை நான்
எனக்கென்று தனி லட்சியமோ
தனிக் கொள்கைகளோ ஏதுமின்றி
தக்கனபிழைத்துவாழ்தல்
விதிப்படி வாழ்பவன் நான்
நாளைக்காய் எதையும்
சேர்த்து வைக்க அவசியம்
இல்லாததால், அதை செய்யாமல்
இன்றைய நாளில் சந்தோசமாய்
கிடைத்த வாழ்வை அனுபவிப்பவன் நான்
அன்றைய நாளின் தேடலை
முகவரியே தந்திராத நண்பனின்
வீட்டில் துவங்கினேன்
நண்பன் குடுத்த சிறு உணவு
அன்று என் அமிர்தமானது
அவன் கைகளிலையே அமர்ந்து
சாப்பிடும் அளவுக்கு நம்பிக்க கொடுத்தது
எனக்கு தோள் கொடுக்கும்
தோழனும் ஆனான்
எங்கள் நட்பும் பெரிதானது
நட்பென்னும் பூ அழகாய்
அங்கு பூத்திட அதை
ரசிக்க மறந்து
அதை கசக்கி எரிந்திட
அவனுக்குள் எங்கிருந்து
அப்படி ஓர் எண்ணம் வந்ததோ
இன்னமும் என் சிறு இதயம்
அவன் செய்ததை
ஒப்புக்கொள்ள மறுக்கிறது
அந்த நினைவுகளை மறக்க மறுக்கிறது
ஆம்
என்னை அவன் கூண்டிலிட்டான்
நான் என்ன தவறு செய்தேன்
அந்த சிறையில் வாடிட
நண்பனை நம்பியதோர் பாவமா??
இந்நாளில் நண்பரென்று
நம்பிக்கை வைப்பது தான்
மிகப்பெரிய பாவம் என்று
உணர்ந்து கலங்கித்தான் போனேன்
நண்பா!!!
உனக்கு என் இப்படி ஓர் எண்ணம்
என்னைக் கூண்டிலிட எப்படி
மனம் வந்தது உனக்கும் ??
வாய் பேசமாட்டேனென்று நீ
என்ன வேண்டுமானாலும் செய்வாயோ ??
செல்லமாய் உன்னிடம் வந்தவனை
கூண்டில் அடைத்துவிட்டு
என்னை உன் செல்லப்பறவை என்றாய்...
நானே தேடி உண்ணும் உணவை
காட்டிலுமா இப்போது நீ தரும்
உணவு இனித்திடும்???
நீ தங்கக்கூண்டே செய்யினும்
அது என் சிறை தானே ???
நான் என்னைக் காப்பாற்ற
கூச்சலிடுவது உனக்கு
ஆனந்தமாய், இன்னிசையாய்
தெரிகின்றது
இவை எல்லாம்
உன் தண்டனயைக்காட்டிலும்
கொடுமையாய் உள்ளது
இது தானோ உன் நட்பு
நம்பிக்கையின்றி
தனிமைச் சிறையில்
உணவின்றி தவிப்பதும்
அதை நீ சிரித்துக்கொண்டே
ரசிப்பதும் ???
நீ குடுக்கும் சிறு தானியத்துக்கு என்
சுதந்திரத்தை உன்னிடம் விட்டுக்
கொடுப்பேன் விற்றுவிடுவேன்
என்று எப்படி நீ எண்ணலாம் ??
வலியவன் எளியவனை அடக்கி
ஆள்வதே உலக நியதி ஆகிவிட்டது
எங்கேயும் காலம் என்பது மாறும்,
இதோ இன்று எனக்கும் தான்
உன் சிறையை விட்டு பறந்து விட
வாய்த்தது ஓர் சந்தர்ப்பம்
உன் நட்பின் பரிசாய் நீ அளித்த
கூண்டையும் சேர்த்து
தூக்கிகொண்டு பறக்க எண்ணினேன்
உன் உணவை உண்ணாததால்
நானே இப்போது திராணியற்று
இருக்கிறேன்
நான் உன்னையும் உன் நட்பையும்
இங்கயே விட்டுவிட
முடிவெடுத்து விட்டேன்
என்னை நீ ஒருவேளை
நன்றி இல்லா ஐந்தறிவு ஜீவன்
எனலாம்
ஆறறிவு கொண்டவன் நீ
நன்றாய் யோசித்து பார் யார்
நன்றி இல்லாமல் நடந்து
கொண்டதென்பது உனக்கே விளங்கும்
நான்
கூடா நட்பு கேடாய் முடியும்
என உணர்ந்து கொண்டது போல் ...
Wednesday, February 15, 2012
Tuesday, February 14, 2012
Thursday, February 2, 2012
Subscribe to:
Comments (Atom)





