Saturday, May 28, 2011

அழகு
















என் காதலை பெற்றதால் தானோ
என்னவள் அழகாய் தோன்றுகிறாள்?
சந்தேகமென்ன ??
சூரியன் ஒளிபெற்றுத்தானே
நிலவே அழகை ஒளிர்கின்றது ....

நம்பிக்கை













கோடியில் ஒருவன் காண்கிறான் கடவுளை
ஆயிரத்தில் ஒருவன் ஜெய்க்கிறான் காதலில்
இருப்பினும் மனிதன்
நம்பிக்கொண்டே தான் இருக்கிறான்
காதலையும் கடவுளையும்

தேடல்

அன்றோ
கனவுகள் மெய்ப்பட வேண்டினேன் ...
காணும் கனவுகளின் அருமை அறியாமல்
கனவுகள் வரவேண்டி யாசித்தேன் ...
பெறும் நிம்மதியான தூக்கத்தை நினையாமல்
தூக்கமாவது நிரந்தரமாய் வேண்டுமென்றேன் ...
கண்களின் மகத்துவத்தை மதியாமல்
இன்றோ
கண்களையும் இழந்துவிட்டேன் ...
இனி
தூக்கம் எங்கே ???
கனவெங்கே ???
அக்கனவு மெய்ப்பதெங்கே???

Friday, May 27, 2011

புரிதல்













எனக்கு புரியும்படி ஒரு கவிதையாவது
எழுது என்றாயே ....
தற்போது தான் புரிந்துகொண்டேன்
என் கவிதையை மட்டும் அல்ல
இதுவரை என்னைக்கூட
நீ புரிந்து கொள்ளவில்லை என

Friday, May 20, 2011

கண்ணில்லா காதல்















காதலால் தானே சாகடிக்கப்பட்டேன்
ஆயினும் என்ன
கண்ணில்லா காதல்,
என் கண்களை தானமாய்
பெற்றுகொள்ளட்டும்
இனியாவது இந்நாளின்
நிஜ உலகை  காணட்டும் ....

செலவு

என்னவள் செலவு செய்கையில் மட்டும்
ரூபாய் நோட்டில் உள்ள
காந்திஜியும் புன்னகைக்க
மறுக்கிறார் ....

Wednesday, May 18, 2011

மின்னல் கண்கள்












கண் பார்வையற்றவனானேன் 
ஆகாயத்தில் நான் கண்ட மின்னலால் அல்ல ...
அழகாய் சிமிட்டிய என்னவள் கண்களால் ...