தோழியே!!!!
என்னை நிராகரித்து
தனிமை படுத்தி
என்னுடன் பேசாமல்
நீ என்னை விட்டு
விலகிச் சென்றதால்
என் மகிழ்ச்சியை
பறித்துக்கொண்டதாய்
உனக்கோர் எண்ணம்
உண்மையில்
நீ எனக்கு அளவில்லா
அழகிய நினைவுகளையும்
கவிதை எழுத நிறைய
வாய்ப்புகளுமே தந்து
விட்டுச் சென்றிருக்கிறாய்
இது ஒன்றும் எனக்கு
இழப்பல்ல நீ என் நட்புக்கும்
இனி வரும் என் வாழ்க்கைக்கும்
நீ தந்து சென்ற பரிசு
நீ பறித்துச் சென்றதாய்
எண்ணிக்கொண்டிருந்த
என் மகிழ்ச்சி கண்டிப்பாய்
இரட்டித்து தான் இருக்கிறது
எனக்குள்
அதை கொண்டு, அதை தந்து
என்னால் வாழவும் முடியும்
என்னை சேர்ந்தவரை
வாழ வைக்கவும் முடியும்
எனினும் இவையெல்லாம்
உன்னால், உன் பிரிவால்
கிடைத்ததால்
உனக்கே உரித்தாகட்டும்
என் பல கோடி நன்றிகள்

No comments:
Post a Comment