Monday, January 7, 2013

புத்தாண்டு












புத்தாண்டு 
ஆம் நம் வாழ்வில் 
புதியதாய் ஓர் ஆண்டு

கடந்த ஆண்டில் வாழ்ந்த 
பலருக்கு இல்லாமல் 
நமக்கு மட்டுமே 
காணக்கிடைத்த 
அற்புதம் தான் இந்த 
புதியதாய் ஓர் ஆண்டு


சிலரை தீராத் துயரிலும்
வெகு சிலரை இன்பத்தில்
நிறைத்து நம்மை 
ஆண்டு வந்த பழைய 
ஆண்டு புதியவனுக்கு 
வழிவிட்டுச்செல்ல,

நமக்கு தலைவனாய் 
புதிய ஒளியுடனும் 
நம்பிக்கையுடனும்
பதவி ஏற்றிருக்கிறது
புதியதாய் ஓர் ஆண்டு

புதியவனே !!!
உன் ஆட்சி சிறப்பாய்
நாட்கள் இனிதாய்  
அமைய வேண்டி நிற்கும் 
பல கோடி மக்களுள் 
நானும் ஒருவனாய்
எதிர்பார்த்திருக்கிறேன்

உனக்கு ஓர் வேண்டுகோள் 
கொண்டாத்ததுடன்
குதுகலத்துடனும் உன்னை 
வரவேற்பது போலவே 
தான் உன் முன்னோரையும்
சிறப்பித்தோம்
அவர்கள் பெருமளவு 
விட்டுசென்றதோ 
துன்பத்தையும், துயரையும்,
பசியையும், பிணியையும்,
போரையும், பிழவையும் தான் 
நீயாவது மாற்றம் தந்திடு 
எம் மக்களுக்கு 

கடமைகளும் கனவுக்குள் 
எனக்குள்ளும்  நிறைந்திருக்கிறது
அது வெறும் சுமைகளாகவும் 
நிறைவேறாத நினைவுகளாகும்
என்னில்  மறைந்துவிடாமல் 
நிச்சயமாய் நிறைவேறிட 
வரம் தருவாய் இறைவன் 
துணையுடன்  

காத்திருக்கிறேன் 
நம்பிக்கையுடன்....

No comments:

Post a Comment