என் கவிதையின் முதல்
வாசகி அவள், விமர்சகி அவள்
என் பிரிய-சகி அவள்
கவிதை பிழைகளை மட்டும்
சொல்லிக்கொண்டிருந்தாள்
நான் திருத்திக்கொண்டேன்
இப்போது என்னிலேயே
பிழை கண்டிருக்கிறாள்
சொல்லிருந்தால்
திருத்திக்கொண்டிருப்பேன்...
ஆனால் அவளோ
காரணம் சொல்லாமல் தவிர்க்கிறாள்
நானோ
காரணம் தெரியாமல் தவிக்கிறேன்
இப்போது ஏனோ என்
கவிதைகள் மட்டுமல்ல
என் நட்பும் கூட தான்
அவளுக்கு பிடிப்பதில்லை
ஒரு வேளை அவள் திருத்திட
புதுக்கவிதைகள் கிடைத்தனவோ?
புது நட்பும் கிடைத்ததோ ??
எதை பற்றியும் எதுவும்
சொல்லாமல்
அமாணுஷ்யமாய் மௌனிக்கின்றாள்
எத்தனையோ முறை
சண்டையிட்டிருக்கிறோம்
ஆனால் இத்தனை
நாட்களாய் பேசாமல்
இருப்பதென்னவோ
இதுவே முதல் முறை
"பரவாயில்லை பேசிவிடு"
என்றது மனம், எழுதி வைத்த
மின்னஞ்சலையாவது
அனுப்பிவிட ஆசை தான்
ஆனாலும் எதோ தடுக்கிறது
என்னை காயப்படுத்தியிருந்தால்
கூட மறந்திருப்பேன்...
அனால் வார்த்தைக்கத்தியால்
கிழிக்கப்பட்டது என் நட்பன்றோ ?
போகட்டும் இனி என்ன??
யோசிக்கிறேன்
"நண்பா" என்ற வார்த்தையால்
ஏமாற்றப்பட்டு விட்டேனோ ??
நம்பிக்கையில்லா நட்பு இனி
எனக்கு தேவைதானோ ??
இந்த முறை நானல்ல
அவளே நல்ல நட்பை இழந்திருக்கிறாள்
சந்தேக தீயால் எனை உயிருடன்
எரிக்க ஆரம்பித்துவிட்டாள்
இனி என் சம்பல் கலந்த காற்றும்
அவள் பக்கம் வீசாது

No comments:
Post a Comment