என் இடது கண் துடிக்கிறது
கண்ணே உனக்கென்ன இடரலோ
கண்டிப்பாய் தெரியும் என்னை
உதவிக்கென அழைக்கமாட்டாயென;
நானாகவே வந்தாலும்
தவிர்த்துவிடுவாயென
தவித்து நிற்கிறேன்
சந்தோஷத்தில் தேவையில்லை
உன் சோகத்தில்லாவது நான்
துணை நிற்கிறேனே??
நம்பிக்கையில்லாமல் என்ன நட்பு
அப்படி மன்னிக்கமுடியாமல்
நான் செய்ததது என்ன தப்பு??
நம் நட்பை காட்டிலுமா
உன் பிடிவாதம் பெரியது
வலிக்குதடி இதயம்
வார்த்தைகளை உதிர்த்தால்
வலிக்குமென்றா
மௌனத்தினால் வதைக்கிறாய்
இது இன்னும் தான் கொல்லுதடி
போடி
வார்த்தைகள் தீர்ந்து போனது
உன் பிரிவை எழுத
வாழ்க்கையில் நிறைந்து போனது
வெறுமை நிறைய
நான் செய்தது உன்னால்
மறக்கமுடியவில்லை எனில்
தண்டித்துவிடு என்னை
மன்னித்து
மௌனத்தை உடைத்து
பெருக்கெடுக்கும் உன்
வார்த்தைகளுக்காய்
காத்திருக்கிறேன்
பேசிவிடு புன்னகையுடன்
கண்ணே உனக்கென்ன இடரலோ
கண்டிப்பாய் தெரியும் என்னை
உதவிக்கென அழைக்கமாட்டாயென;
நானாகவே வந்தாலும்
தவிர்த்துவிடுவாயென
தவித்து நிற்கிறேன்
சந்தோஷத்தில் தேவையில்லை
உன் சோகத்தில்லாவது நான்
துணை நிற்கிறேனே??
நம்பிக்கையில்லாமல் என்ன நட்பு
அப்படி மன்னிக்கமுடியாமல்
நான் செய்ததது என்ன தப்பு??
நம் நட்பை காட்டிலுமா
உன் பிடிவாதம் பெரியது
வலிக்குதடி இதயம்
வார்த்தைகளை உதிர்த்தால்
வலிக்குமென்றா
மௌனத்தினால் வதைக்கிறாய்
இது இன்னும் தான் கொல்லுதடி
போடி
வார்த்தைகள் தீர்ந்து போனது
உன் பிரிவை எழுத
வாழ்க்கையில் நிறைந்து போனது
வெறுமை நிறைய
நான் செய்தது உன்னால்
மறக்கமுடியவில்லை எனில்
தண்டித்துவிடு என்னை
மன்னித்து
மௌனத்தை உடைத்து
பெருக்கெடுக்கும் உன்
வார்த்தைகளுக்காய்
காத்திருக்கிறேன்
பேசிவிடு புன்னகையுடன்
காத்திருக்கிறேன் கேட்டுக்கொள்ள
வாழ்க்கையை வெல்லவும் தான்

No comments:
Post a Comment