
இன்றவளின் பிறந்தநாள்
அவள் பிறந்ததை கொண்டாட
காலம் படைத்திருக்கும்
புதிய நாள்
இணையில்லா சிறந்தநாள்
இமியளவும் மறக்க முடியாத
திருநாள்
பிறந்தநாளில்
பரிசு கொடுப்பது தான்
நம் வழக்கம் என்றாலும்
எல்லாவற்றிலும் புதுமையை
எதிர்பார்க்கும் அவளுக்கு
பிறந்தநாள் பரிசு என்னிடம்
வாங்கிக்கொள்ள
பிரியமிருந்ததில்லை
எந்நாளும், எப்போதும்
அதனால் தானோ என்னவோ
அன்றே நாங்கள் பழகிய நாட்களில்
என் காலம் முழுக்க நான் எண்ணி
வாழ்ந்திட எண்ணற்ற நினைவுகளை
தந்திருக்கிறாள்
எனக்கு
அவள் பிறந்தநாளில்
அவள் நினைவாய்
அவள் தந்த
அவள் நினைவுகள்
அம்மம்மா இது அதிகம் தான்
பத்திரமாய் வைத்திருந்தேன்
பாதுகாத்தும் வைத்திருப்பேன்
அவள் இல்லாத இந்நாளில்
அவைகளை நினைத்துக்கொண்டே
நிம்மதியாய் இருந்திருப்பேன்
ஆனாலும் நிறைவேறாத ஏக்கமாய்
நிலைத்திருக்கிறது
அவள் தந்தது போலவே
என் நினைவாய் நான்
அவளிடம் சேர்க்க மறந்திட்ட
என் பிறந்தநாள் வாழ்த்து
போகட்டும், என்னவளுக்கு இனி
அனுதினமும் கொண்டாட்டம் தான்
அவள் பற்றி நினைக்கும் போதெல்லாம்
அவளுக்கு பிறந்தநாள் தான்
அவள் நினைவுகள் வரும் நாளெல்லாம்
அவள் என் வாழ்த்துக்களை
பெரும் நாள் தான்
No comments:
Post a Comment