Sunday, December 30, 2012

மனநோய்

















தனியே சிரிப்பதும்
தனக்குள்ளே பேசுவதும் 
தனிமையில் தவிப்பதும் 
உலகை மறப்பதும் 
ஏன் 
சந்தோஷத்தில் அழுவதும்
துக்கத்தில் சிரிப்பதையும் 
சிலர் பேத்தல் என்றார்கள் 
நான் காதல் என்றேன் 

எனக்கு 
மன அழுத்தம் என்போர்க்கு 
எப்படி தெரியும் அவள் 
நினைவுகளை
பல வருடங்களாய் 
தேக்கிவைப்பதால் தான் 
இந்த  அழுத்தமென்று 

அவள்  எண்ணங்கள் மட்டுமே 
நிறைந்ததால் தான் அது 
மன நிறைவென்றேன் 
மற்றவரோ அதை 
மனசோர்வென்றனர்

உலகமே புரியாமல், அறியாமல்  
ஒரே சிந்தனையுடன் 
வலிகளும் வேதனைகளும்
இருந்தும் அதை மறந்தோ 
மறைத்தோ வாழ்வது 
போன்று  பல 
பொதுவான அறிகுறி
காதலுக்கும் மனநோய்க்கும்
இருக்குமென்பீர்களேயானால்
நான் சொல்லவேன் 
காதலிருக்கும் எல்லா
மனமும்
அந்த மனம் பெற்ற 
எல்லா மனிதருமே 
மன நோயாளி தான்

சரி யாரோ என்னமோ 
சொல்லிவிட்டு போகட்டும் 
இதை பைத்தியம் என்றால் 
இதன் வைத்தியம் 
என்னவள், 
என்னவள் காதல் மட்டும்
தான் 

என்னவளே !!!
நான் கொண்டிருப்பது
காதலோ, பிறர் சொல்வது
போல் மனநோயோ
எதுவாகினும் எப்படியாவது 
என்னை காப்பாற்றி
கொடு உன்னிடம் 

No comments:

Post a Comment