எந்தக்கவிஞனும்
உன்னை இவ்வளவு
அழகாய், தெளிவாய்
வர்ணிக்க முடியாது
என்று தெரிந்துதான்
உன்னை பற்றி நீயே
கவிதை
எழுதிக்கொள்கிறாயோ ??
இருந்தாலும்
நீ எழுதும் கவிதையும்
உன் போல்
பேர் அழகுதான்
அது
உன் நெற்றி பொட்டு
நீ ஒரே கவிதையில்
கவிஞர் ஆகிவிட்டாய்
ஆம்
என்னை ஒரேயொரு
கவிதையால்
ரசிகன் ஆக்கிவிட்டாய்
உனக்கும்
உன் கவிதைக்கும்

No comments:
Post a Comment