நம்மை அறியாமல்
விழிகளில் வழிந்தது
கண்ணீர்...! காரணம்,
நாம் அறியாமல்,
நாம் நேசித்தவர்கள்,
நமக்கு பிரியமானவர்கள்
நமது உயிரானவர்கள்
நம்மை விட்டு பிரிந்து
வெகு தொலைவிற்கு சென்றுவிடுகிறார்கள்
இது ஈடு செய்ய முடியா இழப்பு தான்
இருப்பினும் நண்பா....
உயிர்கள் பிரியக்கூடும்
உணர்வுகள் பிரிவதில்லை
உணர்ச்சிகள் பிரிவதில்லை
பாதைகள் பிரியக்கூடும்
பாசங்கள் பிரிவதில்லை
பிணைப்புகள் பிரிவதில்லை
இந்தப்பிரிவு நிரந்தரம் அல்ல
இந்த சோகமும் நிரந்தரம் அல்ல
கண்களால் பார்க்க முடியாமல் போனாலும்
நமக்கு அன்பானவர்கள்
நம்மோடும், நம் நினைவுகளோடும்
என்றும் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்

No comments:
Post a Comment