
நீ அழகாய் இருக்கிறாய்
பயமாய் இருக்கிறது என்று
நான் ஒரு போதும் நான்
பயந்து போவதில்லை
ஆனால் கண்டிப்பாய்
வியந்து போகிறேன்
வான் தேவதைகளுக்கு
நிகராய் இல்லையில்லை
அதை விடவும்
அதுவும் நம் பூமியில்
ஓர் அழகியா என்று..
என்னைப்போலவே
உன்னைக்காணும்
எவரும் வியப்பில்
வீழ்வதால் என்
வியப்பிலும் கூட
உண்மை இருக்கத்தான்
செய்கிறது
No comments:
Post a Comment