Tuesday, June 11, 2013

வரிகளின் வலிகள்












கவிதை எழுத
வார்த்தைகளை தேடினேன்
கிடைக்கவேயில்லை
காரணம் இப்போது நீ
என்னுடன் இருக்கவில்லை

இப்போது தான்
புரிந்துகொண்டேன்
என் கவிதையின் வரியாய்
நீ தான் இருக்கிறாய் என்றும் 
என் வாழ்க்கையின் வழியே
நீ தான் என்பதையும் 

நீ பிரிந்தாய், வலியுடன்
நான் தொலைய
கவிதையின்  வரிகளும்
மறந்தது, மறைந்தது
எனக்கே தெரியாமல்
என்னில்

இன்னமும் கிடைக்கவில்லை
என் கவிதைக்கான வரியும்
தொடர்ந்து உன்னுடன்
கை கோர்த்து நடக்கும்
என் வாழ்க்கைகாண வழியும்
என் தேடலின் தொடக்கம்
இனிதே ஆரம்பம் 

என் கல்லறையில்...
















உடைந்து போவேன்
என தெரிந்தும்
விலகி போனாயே
என்னவளே,
இறந்தே போயினும்
உன்னை மறந்து
போகமாட்டேன்
என அறியாயோ??

என் மூச்சாய் எனக்குள்
நிறைந்து போனவள் நீ
உன்னை எப்படி விலகிப்
போவேன்??

எது எப்படியோ நீ
என்னுடன் இல்லையென்பது
நிதர்சனமான  உண்மை

அதை புரிந்து கொள்ள
எனக்கு அறிவும் இல்லை
இதை  ஏற்றுக்கொள்ளும்
நிலையில் மனதும் இல்லை
உனக்கு இந்த வலி
தெரியப்போவதும் இல்லை
நீ தெரிந்து கொள்ளும்போது
நான் இருக்கபோவதும் இல்லை

உளறுவதாய் தெரிகிறதோ??
உண்மையின் உருவம்
இதுதானென்று 
உணரும் நிலையில்
அழுதிடுவாய்
அன்றும் கூட உன்
கண்ணீரை  துடைத்திட
முடியாமல்  துடித்திடும்
நின்றுவிட்ட இதயம்
என் கல்லறையில்...

தோல்வி












பிறந்ததிலிருந்தே
தோல்விகளை  மட்டுமே
கண்டவன் நான் 

தோற்றே பழகிய எனக்கு 
 
என்  முதல் வெற்றி
உன் காதல்
கடைசி தோல்வி
உன் பிரிவு